90 சதவிகிதம் முடிவடைந்தது அரண்மனை நான்காம் பாகத்தின் படப்பிடிப்பு!
Sundar C in Iruttu Movie HD Images
நடிகர் சுந்தர் சி நடித்து இயக்கும் அரண்மனை 4 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை சீகுவல்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அரண்மனை நான்காம் பாகத்திற்கான வேலைகளையும் சுந்தர் சி முன்னெடுத்தார். இந்த நிலையில் சுந்தர் சி, ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்து வரும் அரண்மனை 4 பணிகள் தற்போது 90 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்கள் கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்ததால் அதன் அடுத்தடுத்த பாகங்கள் எப்படி இருந்தாலும் கூட ஓரளவிற்கு வசூலில் வென்று விடுகின்றன “