அசோக் செல்வன் – வெங்கட் பிரபு இணையும் ’மன்மத லீலை’ திரைப்படத்தின் ’Glimpse’ வெளியானது!
Ashok Selvan In And As Manmadha Leelai Glimpse Is Out
நடிகர் அசோக் செல்வன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ‘Glimpse’ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ராக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி அமரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ’Glimpse’ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்யும் அசோக் செல்வன், மிகவும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தெரிவு செய்து விட்டாரோ என்னும் பயம் நமக்கே எழுகிறது “