இயக்குநர் நெல்சன் வெங்கடேசனுடன் இணையும் அதர்வா முரளி?
Atharva Next With Nelson Venkatesan Idamporul
நடிகர் அதர்வா முரளி அவர்கள் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அடுத்ததாக புதிய த்ரில்லர் திரைப்படம் ஒன்றை அதர்வா முரளி அவர்களை லீடாக வைத்து எடுக்க இருக்கிறாராம். வெகுவிரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிடவும் படக்குழு தீர்மானித்து இருக்கிறதாம்.
“ படத்திற்கு ஹீரோயினாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம், டி இமான் படத்திற்கு இசையமைக்க இருக்கிறாராம் “