அவதார் 2-வை திரையிட மறுத்த தியேட்டர் உரிமையாளர்கள், காரணம் என்ன?
அவதார் 2 திரைப்படத்தை தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் திரையிட மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அவதார் 2 திரைப்படத்தின் தமிழக பங்கீட்டாளர், தமிழக தியேட்டர் உரிமையாளர்களிடம், அவதார் 2-வை திரையிடுவதற்கு 70 சதவிகிதம் பங்கை கேட்டதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்க மறுத்து அவதார் 2 திரைப்படத்தை திரையிட மறுத்து இருக்கின்றனர்.
“ பங்கிட்டு உரிமையாளர்களுக்கு ஒரு பங்கு கொடுப்பது என்பது என்னவோ உத்தமம் தான், ஆனால் 70 சதவிகிதம் என்பது யாராக இருந்தாலும் அதிகம் தான் “