உலகளாவிய அளவில் தேடு பொருளாகி ட்ரென்டிங்கில் ஏறி இருக்கும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!
Beast Arabic Kuthu Vjay And Pooja Hegde
நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது உலகளாவிய அளவில் நம்பர் 1 ட்ரென்டிங்கில் அது ஏறி இருக்கிறது.
வெளியான சிறு நிமிடங்களிலேயே ‘அரபிக் குத்து’ அனைத்து இணையதளத்திலும் ட்ரென்டிங்கில் ஏறி இருந்த நிலையில், தற்போது உலகளாவிய அளவில் தேடு பொருளாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் ‘பீஸ்ட்’, ‘அரபிக் குத்து’ வார்த்தைகள் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகின்றன.
“ 20 மில்லியனுக்கும் அதிகான பார்வையாளர்கள், 2 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் என்று இணையத்தை கலக்கி வருக்கிறது பீஸ்ட் திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் “