வா மோதி பார்க்கலாம் வா! ‘கேஜிஎப்’ களத்தில் இறங்கும் ‘பீஸ்ட்’!
Beast Unofficial Release Date Announced
நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ கேஜிஎப் திரைப்படத்துடன் போட்டி போட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13 அன்று கேஜிஎப் இரண்டாம் பாகத்துடன் களம் இறங்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“ முதலில் பீஸ்ட் தயாரிப்பு நிறுவனம் பின் வாங்கினாலும், படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, ‘வா மோதி பார்க்கலாம் வா’ என்று கே.ஜி.எப் திரைப்படத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறது ‘பீஸ்ட்’ படக்குழு “