அடுத்து அடுத்து பீஸ்ட் அப்டேட்! ’பீஸ்ட்’ மூன்றாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Actor Vijay In Beast Third Single From Tomorrow
நடிகர் விஜய் அவர்களின் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அரபிக் குத்து, ஜாலி ஓ ஜிம்கானா என்று இரண்டு சிங்கிள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ட்ரெயிலரில் வெளியான தீம் பாடலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
“ படம் வெளியாகும் வரையிலும் ரசிகர்களுக்கு தினசரி அப்டேட் இருக்கும் போல, தினம் ஒரு அப்டேட் தினம் ஒரு ட்ரெண்டிங் என்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் வெளுத்து வாங்குகின்றனர் “