பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, நடிகர் விஜய் உடன் நடிக்க விருப்பம்!
xr:d:DAFtdagN1BU:232,j:6677009644442846350,t:24032913
பிரபல பாலிவுட் நடிகையாக அறியப்படும் அனன்யா பாண்டே, நடிகர் விஜய் அவர்களுடன் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னனி நடிகையாக அறியப்படும் அனன்யா பாண்டே, தென் இந்திய சினிமாக்களில் வலம் வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த லைகர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் கூட அவருக்கும் ஒரு நல்ல கதைக்களத்துடன் ஒரு தென் இந்திய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று பல இயக்குநர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறாராம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் விஜய் அவர்களுடன் தன்னுடைய முதல் படம் இருக்க வேண்டும் என அனன்யா பாண்டே ஆசை கொள்கிறாராம். விஜய் ஏற்கனவே தனது கடைசி படத்தை தீர்மானித்து விட்ட நிலையில் அனன்யா பாண்டேவின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
“ அனன்யா பாண்டேவிற்கு பாலிவுட்டில் தற்போது வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது, அதனால் தான் அவர் தென் இந்திய சினிமா பக்கம் திரும்புவதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர் “