விரைவில் ரன்பீர் கபூரை கைப்பிடிக்க இருக்கும் அலியா பட்!
நீண்ட நாட்களாக காதல் செய்து கொண்டு வருவதாக சொல்லப்பட்ட ரன்பீர் – அலியா ஜோடி விரைவில் திருமணம் முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாலிவுட் பிரபலங்களான ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் நீண்ட நாட்களாவே காதல் செய்து வந்தனர். பொதுவெளியில் காதலை ஒப்புக் கொண்டு இருந்தாலும் அவர்களின் திருமணம் பற்றிய பேச்சு இழுபறியிலேயே இருந்தது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 17 அன்று இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இனி காதல் கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு கல்யாண கிசு கிசுக்களை தொடங்கி விடலாம் என்று நினைத்து இருப்பார்கள் போல ரன்பீர் – அலியா ஜோடி “