‘RRR’ திரைப்படத்திற்கு எதிராக கொடி தூக்கும் கன்னட ரசிகர்கள், காரணம் தான் என்ன?
கர்நாடகா ரசிகர்கள் ‘BoyCottRRRInKaranataka’ என்ற ஹேஸ்டேக்கை RRR திரைப்படத்திற்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர்.
கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் ‘RRR’ திரைப்படம், கன்னட மொழியில் வெளியாகவில்லை. இதனால் கொந்தளித்த ரசிகர்கள் எங்கள் தாய் மொழியில் உருவாகியும் எங்கள் பகுதியில் எங்கள் மொழியில் வெளியாகாத படம் எங்களுக்கு தேவையில்லை என்று ‘BoyCottRRRInKaranataka’ என்ற ஹேஸ்டாக்கை இணையத்தில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
மாநில பட வெளியீட்டு நிறுவனம் மற்றும் RRR தயாரிப்பு நிறுவனம் இரண்டுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தை மற்றும் புரிதல் இல்லாத காரணத்தினாலேயே கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் RRR கன்னட மொழியில் வெளியாகவில்லை என்ற காரணம் கூறப்படுகிறது.
“ ரசிகர்கள் கேட்பதில் நியாயம் இருந்தாலும், இதில் தவறு என்பது கர்நாடகாவின் பட வெளியீட்டு உரிமையாளர்களிடமே இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை மார்ச் 25 வரை பொறுத்து இருந்து பார்க்கலாம் ”