பிரம்மாஸ்திரா | ‘படத்துல VFX மட்டும் தான் இருக்கு கதைய காணோம்’
Brahmastra Movie Review
அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாஸ்திரா திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி மிக்ஸ்டு ரிவ்யூக்களை பெற்று வருகிறது.
படம் முழுக்க முழுக்க அஸ்ட்ராவெர்ஸ் எனப்படும் சினிமேட்டிக் யுனிவர்ஸ் பாணியில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக படக்குழு பெரிய பில்டப்புகளை கொடுத்து இருந்தது. ரன்பீர், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என்ற பெரிய பட்டாளங்களை மேஜிக்மேன் போல மட்டும் காண்பித்து கதைக்களத்தில் மொத்தமாய் சொதப்பி இருக்கின்றனர்.
“ 410 கோடியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நிச்சயம் அசலையாவது அள்ளுமா என்பது சந்தேகம் தான். பெரிய பட்ஜெட் படம் தான் பேன் இந்தியா படம் என்பதை பாலிவுட் இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கிறது. எவ்வளவு செலவளித்தாலும் முதலில் கதை முக்கியம் என்பதை பாலிவுட் வட்டாரம் உணர வேண்டும் “