கோப்ரா ட்ரெயிலர் | ’சார் நான் சாதாரண மேத்ஸ் வாத்தியார் சார்’
Cobra Trailer Is Out
நடிகர் விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து இணைவில் உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதிரடி பின்னனி இசை, ஆர்ப்பரிக்கும் சீன்கள், 10 கெட்டப்கள் என்று சீயான் விக்ரமின் கோப்ரா ட்ரெயிலர் அடுத்தடுத்து பல ஆச்சரியங்களை தருகிறது. டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அவர்களின் திரைப்படம் என்பதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
“ படம் ஆகஸ்ட் 31 அன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்றே ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிகிறது “