சினிமாவில் இருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்களை நடிகைகள் வெளிப்படையாக சொல்ல வேண்டும்!
Cinema Has Lots Of Adjustment Its True Idamporul
சினிமாவில் இருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்களை நடிகைகள் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என ரம்யா நம்பீசன் கருத்து கூறி இருக்கிறார்.
ஆம் சினிமாவில் நடிகைகளுக்கு நிறையவே அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது. அதை ஒரு சிலர் சகித்துக் கொள்கின்றனர். ஒரு சிலர் கண்டும் காணாமல் போய்விடுகின்றனர். இன்னும் சிலர் அதில் சிக்கி வாழ்வை இழந்து விடுகின்றனர். நடிகைகள் அதை வெளிப்படையாக கூறினால் மட்டுமே ஒரு பயத்தை உருவாக்க முடியும். சினிமாவும் ஆரோக்கியமானதாக அமையும் என ரம்யா நம்பீசன் கூறி இருக்கிறார்.
“ நடிகைகள் சகித்துக் கொள்வதாலும், கண்டும் காணாமல் போவதாலும் மட்டும் தான் இந்த தவறு மீண்டும் மீண்டும் நடக்கிறது. இனி வெளிப்படையாக பேசி விடுங்கள் எனவும் ரம்யா நம்பீசன் கோரிக்கை விடுத்து இருக்கிறார் “