இன்றைய சினிமா பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை – அனு இம்மானுயேல்
How I Face Adjustments In Cinema Says Anu Emmanuael Idamporul
இன்றைய சினிமா பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என நடிகை அனு இம்மானுயேல் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
இன்றைய சினிமா பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. ஒரு படத்தில் சின்ன வேடத்திற்கு கூட நிறைய அட்ஜெஸ்ட்மெண்ட்களை எதிர்பார்க்கிறார்கள். எனக்கும் இப்படியெல்லாம் நடந்து இருக்கிறது. அந்த சமயங்களில் எனக்கு என் குடும்பம் உறுதுணையாக நின்றது என நடிகை அனு இம்மானுயேல் பேட்டியில் கூறி இருக்கிறார்.
இது போக, ‘வக்கிரபுத்திகாரர்கள் சினிமாவில் அதிகம், ஒரு நடிகையாக பல கடின விடயங்களை இங்கு எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கெல்லாம் நிறையவே தைரியங்கள் தேவைப்படும். குடும்பங்களை உங்களுக்கு துணையாக வைத்துக் கொள்ளுங்கள், அந்த தைரியம் தானாகவே வந்து விடும்’ எனவும் நடிகை அனு இம்மானுயேல் கூறி இருக்கிறார்.
“ ஒவ்வொரு நடிகைகளும் இப்படி வெளிப்படையாக சினிமாவின் கோரங்களை எடுத்து உடைத்தால் எதிர்காலத்தில் இப்படி செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயம் வர வாய்ப்பு இருக்கிறது “