D50 | ‘இயக்குநராக, நடிகராக என ஒரே படத்தில் இரண்டு அவதாரம் எடுக்கும் தனுஷ்’
D 50 Official Update Is Out Idamporul
நடிகர் தனுஷ் அவர்கள் அவரது 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷ் அவர்கள் எழுதி இயக்கி அவரே நடிக்கும் அவரது 50 ஆவது திரைப்படத்தின் வேலைகள் ஆரம்பித்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் நடிகையாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் தகவல்.
“ நடிகர் கமல்ஹாசன் போல, நடிகர் தனுஷ் அவர்களும் அனைத்து துறைகளிலும் கால் பதித்து சாதித்து வருகிறார். இந்த அவதாரமும் நிச்சயம் அவருக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை “