டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது!
Demonte Colony 2 First look And Motion Poster Is Out Idamporul
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில், சாம் சி எஸ் அவர்களின் இசையில், உருவாகி வரும் டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மோசன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2015 அன்று வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய திரில்லர் பரிணாமத்தை உருவாக்கிய டிமான்ட்டி காலனி திரைப்படத்தின், இரண்டாவது பாகத்திற்கான முன்னெடுப்பு கிட்டதட்ட 8 வருடங்களுக்கு பின்னர் எடுக்கப்பட்டு இருக்கிறது. இன்னமும் முதல் பாகத்தின் தாக்கம் ரசிகர்களிடையே அப்படியே தான் இருக்கிறது என்பது இந்த இரண்டாம் பாகத்தின் மோசன் போஸ்டருக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போதே தெரிகிறது.
“ அஜய் ஞானமுத்து அவர்களுக்கு கோப்ரா திரைப்படம் பெரிதளவில் போகவில்லை, நிச்சயம் டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கலாம் “