தனுஷ் 51 திரைப்படத்தின் கதாநாயகி ஆகிறார் ராஷ்மிகா மந்தனா!
Rashmika Madanna On Board Of Dhanush 51 Idamporul
தனுஷ் 51 திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு பட இயக்குநர் சேகர் கமுலா அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் தனுஷ் 51 திரைப்படத்திற்கு கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் இன்னொரு நடிகையாக சாய்பல்லவியும் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
தற்போது நடிகர் தனுஷ் அவர்கள், தனுஷ் 50 திரைப்படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். வெகுவிரைவில் அத்திரைப்படத்தின் வேலைகளை முடித்து விட்டு, தனுஷ் 51 திரைப்படத்திற்கான வேலைகளை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவரை கேஸ்டிங் மற்றும் கதை விரிவாக்கம் வேலைகளை செய்ய இருக்கிறாராம் இயக்குநர் சேகர் கமுலா.
“ படம் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்றும் சொல்லபடுகிறது, இதற்காக நாகார்ஜூனா அவர்களை கமிட் செய்யவும் படக்குழு முடிவெடுத்து இருக்கிறதாம் “