விஜய், நடிகர் அஜித்தை விட தமிழகத்தில் மிகப்பெரிய ஸ்டார் – வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு
Producer Dil Raju About Varisu Release
நடிகர் விஜய் அவர்கள் அஜித்தை விட தமிழகத்தில் பெரிய ஸ்டார் என்று ஒரு பேட்டியில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
நடிகர் விஜய் என்பவர் நடிகர் அஜித்தை விட தமிழகத்தில் மிகப்பெரிய ஸ்டார், வாரிசு திரைப்படத்திற்கும், துணிவு திரைப்படத்திற்கும் ஈகுவல் ஸ்கிரீன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெகு விரைவில் உதய் அவர்களை சந்தித்து பேச இருக்கிறேன் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ ஸ்கிரீன் கேட்பது தவறல்ல, ஒருவரை ஸ்டாராக உயர்த்தி ஸ்கிரீன் கேட்பது தவறு என்று சமூக வலைதளத்தில் ரசிகர் பெருமக்கள் தில் ராஜூ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் “