படத்தின் புரொமோசனுக்கு வர மறுத்த நடிகை ஸ்வயம் சித்தா, காண்டான இயக்குநர்!

Director ANgry With Swayam Siddha For Not Coming For Promotion Idamporul

Director ANgry With Swayam Siddha For Not Coming For Promotion Idamporul

’எனக்கு எண்டே கிடையாது’ என்ற படத்தில் நடித்து விட்டு, படத்தின் புரொமோசனுக்கு ஸ்வயம் சித்தா வர மறுத்ததால் படத்தின் இயக்குநர் காண்டாகி இருக்கிறார்.

தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட் ராமன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் ரமேஷ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம் ரமேஷ் மற்றும் ஸ்வயம் சித்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனக்கு எண்டே கிடையாது’ திரைப்படத்தின் புரோமொசன் வேலைகள் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

படத்தின் ஹீரோயின் ஆன ஸ்வயம் சித்தா, இந்தியன் 2 உள்ளிட்ட பிற படங்களின் வேலைகளில் பிசியாக இருப்பதால், என்னால் புரொமோசனுக்கு வர இயலாது என இயக்குநர் விக்ரம் ரமேஷ் அவர்களிடம் கூறி இருப்பார் போல. இதனால் காண்டான இயக்குநர், சின்ன படங்களின் புரொமோசனுக்கு எல்லாம் வர மாட்டீர்கள் என்றால், பெரிய படங்களில் மட்டும் நடியுங்கள் என ஸ்வயம் சித்தாவை கடுமையாக சாடி இருக்கிறார்.

“ பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் இதையே தான் செய்கிறார்கள், பெரிய படம் என்றால் ஓடி சென்று புரொமோசன் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். சின்ன படம் என்றால் சம்பளம் வாங்கி விட்டு நடித்து விட்டு கலண்டு கொள்கிறார்கள் “

About Author