இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் புதிய வெப் சீரிஸ்!
Arun Kamaraj Directing New Web Series Idamporul
இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸ் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அருண் காமராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் ‘லேபிள்’ என்ற புதிய வெப்சீரிஸ் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிஸ்னி ஹாட் ஸ்டார் வலைதளம் அதை வெளியிட இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ இந்த வெப் சீரிஸ்க்கு ஜெயசந்திர ஹாஸ்மி கதை எழுத இருப்பதாகவும், முத்தமிழ் பதிப்பகம் இந்த வெப் சீரிஸ்சை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “