ரஜினி 170 | ‘இயக்குநர் அருண் ராஜா காமராஜ் உடன் இணைகிறாரா நடிகர் ரஜினி காந்த்’
Arun Raja Kamaraj Join Hands With Rajini Sir 170th Film
நடிகர் ரஜினி அவர்கள் தனது 170-ஆவது படத்திற்காக இயக்குநர் அருண் ராஜா காமராஜ் அவர்களுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாடகராக, பாடலாசிரியராக கோலிவுட்டில் அறிமுகமாகி பின்னர், கனா, நெஞ்சுக்கு நீதி என்ற படங்களின் இயக்குநராகவும் ஒரு படி உயர்ந்தவர் அருண் ராஜா காமராஜ். தற்போது ரஜினி காந்த் அவர்களின் 170-ஆவது படத்திற்காக அருண் ராஜா இயக்குநராக இணைய இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
“ ஒரு பக்கம் நெல்சன் – விஜய் காம்போ, இன்னொரு பக்கம் அவரின் நெருங்கிய நண்பர் அருண் ராஜா காமராஜ் – ரஜினி காம்போ ஒரு வழியா இளம் இயக்குநர்கள் கோலிவுட்டை கலக்கி வருகின்றனர் “