17 வருட திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட இயக்குநர் பாலா – முத்து மலர் தம்பதியினர்!

Director Bala Officially Divorced His Wife Muthu Malar

Director Bala Officially Divorced His Wife Muthu Malar

சில வருடங்களாவே கருத்து வேறுபாடுடன் மனதளவில் பிரிந்து இருந்த இயக்குநர் பாலாவும் அவரது மனைவி முத்து மலரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்த இயக்குநர் பாலாவும், முத்து மலரும், கடந்த சில வருடங்களாகவே மனதளவில் பிரிந்து இருந்து வந்து இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று அதிகாரப்பூர்வமாக பிரிந்து இருக்கின்றனர்.

“ இதன் மூலம் பாலா-முத்து மலர் அவர்களின் 17 வருட திருமணவாழ்வு முடிவுக்கு வந்து இருக்கிறது. பாலா – முத்து மலர் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author