வந்துட்டேன்னு சொல்லு, கமெர்சியல் கிங் ’ஹரி’ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
Arun Vijay In And As Yaanai Trailer Is Out
இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் இணையும் ‘யானை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
ஆக்சன், காதல், எமோசனல், விறுவிறுப்பு என்று அனைத்தையும் கலந்து ஒரு பக்கா மாஸ் பொழுது போக்கு படத்தை கொடுப்பதற்கு பெயர் போனவர் இயக்குநர் ஹரி என்றே சொல்லலாம். கிட்டதட்ட ஒரு கமெர்சியல் கிங் என்று கூட அவரை சொல்லலாம். இந்த நிலையில் அவரும் அருண் விஜய்யும் இணையும் யானை திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிக அளவில் ரசிக்கப்பட்டும் வருகிறது.
” படம் திரைக்கு வருகின்ற ஜூன் 17 அன்று வர இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது, நிச்சயம் இந்த படம் ஹரி அவர்களின் மார்க்கெட்டை பழையபடி தூக்கி நிறுத்தும் என்பது ட்ரெயிலரிலேயே புலப்படுகிறது “