இயக்குநர் பார்த்திபன் அவர்களின் ‘இரவின் நிழல்’ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Iravin Nizhal Teaser Is Out
இயக்குநர் பார்த்திபன் அவர்களின் புதிய முயற்சியான ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அவ்வப்போது சினிமா உலகிற்குள் புதிய முயற்சிகளுக்கு வித்திடுபவர் இயக்குநர் பார்த்திபன். இந்த முறை உலகளாவிய அளவில் முதன் முதலில் சிங்கிள் ஷாட் மூலம் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் ஒன்றை உருவாக்கி நம் முன் வைத்து இருக்கிறார். அதை உலக அளவில் எடுத்துச் செல்லும் பொறுப்பு நம்மிடமே இருக்கிறது.
“ புது முயற்சிகளுக்கு எப்போதும் ரசிகர்கள் கை கொடுக்க வேண்டும். இன்று வந்த படத்தை என்றோ கொண்டாடி தீர்ப்பதற்கு பதில் இன்றே கொண்டாடுவோம். கோலிவுட்டை உலக தரத்திற்கு தூக்கி பிடிப்போம் “