எதுவும் விளம்பரத்திற்காக செய்யப் படவில்லை, மைக்கை தூக்கி எறிந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன் – இயக்குநர் பார்த்திபன்
Parthiban Mike Throwing Controversy
நடிகர் பார்த்திபன் அவர்கள் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்ததற்கு மன்னிப்பு கோரி இருக்கிறார்.
அந்த நேரம் அந்த நிமிடம் வந்த கோபத்தை கால இயந்திரம் இருந்தால் மாற்றி விடலாம். இல்லை. மைக்கை தூக்கி எறிந்தது படத்தின் விளம்பரத்திற்காக அல்ல, கடந்த 2 நாட்களாக நான் தூக்கி எறிந்தது தான் ட்ரெண்டிங் போல, தவறு தான் அதற்காக மன்னிப்பை எடுத்து முன் வைக்கிறேன் என்று பார்த்திபன் கூறி இருக்கிறார்.
மனிதனின் உணர்வுகள் என்பது சாதாரணமானது தான், கோபம் என்பது எல்லோருக்கும் வருவது தான், ஆனால் அது ஒரு பிரபலமானவரிடம் இருந்து வெளிப்படும் போது அது ஏனோ தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு விடுகிறது.
“ இதில் இயக்குநர் பார்த்திபன் மீது எந்த தவறும் இல்லை. அவரின் கோபமும் தவறில்லை. நெகட்டிவ் விமர்சனங்களை தவிர்த்து விட்டு அவரின் உலகளாவிய படைப்பை கொண்டாடுவோம் “