அமெரிக்காவில் ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளிய ‘RRR’ திரைப்படம்!
RRR Collects 5 Million Dollar In USA
ராஜ்மவுலியின் ‘RRR’ திரைப்படம், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ராஜ்மவுலியின் மூன்றரை வருட படைப்பான ‘RRR’ நேற்று உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான திரையரங்களில் வெளியாகி இருந்தது. பெரும்பாலும் பாசிட்டிவ் ரிவ்யூக்களையே அள்ளிய ‘RRR’ அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளி இருக்கிறது.
“ இதுவரை இந்திய அளவில் அமெரிக்காவில் அதிக வசூலை அள்ளி இருக்கும் பட வரிசையில் முதல் இடத்தில் இருப்பது பாகுபலி 2 திரைப்படமே. இதே நிலை நீடிக்குமானால் ’RRR’ பாகுபலி 2வை மிஞ்சுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது “