உலகளாவிய அளவில் 950 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது ‘RRR’!
Director RajMouli In RRR Collects More Than 950 Crores
உலகளாவிய அளவில் ’RRR’ திரைப்படம் 950 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
ராஜ் மவுலி என்றாலே ஹிட் என்று ஆகி விட்டது. ஒரு தயாரிப்பாளருக்கு எந்த அளவுக்கு செலவை இழுக்கிறாரோ அந்த அளவுக்கு புகழையும் வசூலையும் தன் படத்தினால் திருப்பி கொடுத்து விடுகிறார். உலகளாவிய அளவில் RRR திரைப்படத்திற்கு 950 கோடிக்கும் மேல் வசூலை எடுத்துக்கொடுத்து இருப்பது நிச்சயம் ராஜ்மவுலியின் தனித்திறன்.
“ ஒரு இந்திய சினிமா உலக அளவிற்கு உயர்ந்து நிற்கிறது என்றால் ஒவ்வொரு சினிமா ரசிகர்களும் நிச்சயம் பெருமை கொள்ளத்தானே வேண்டும் “