உலகளாவிய அளவில் 750 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கும் ’RRR’ திரைப்படம்!
RRR Collected 750 Crores Plus In World Wide
இயக்குநர் ராஜ்மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் 750 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது.
ராஜ் மவுலி, ராம் சரண், NTR, ரவி தேஜா, அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகி இருந்த ‘RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் மெகா ஹிட் அடித்து, கிட்ட தட்ட 750 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பிரம்மாண்டம் என்பது படத்தை உருவாக்குவதில் இல்லை, மக்கள் கொண்டாடுவதில் இருக்கிறது என்பதை ராஜ்மவுலி மற்றுமொரு முறை நிரூபித்து இருக்கிறார் “