நாளை முதல் திரை அரங்குகளில் வெளியாகிறது, ராஜ் மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’!
RRR Movie Releasing From Tomorrow
பிரம்மாண்டத்திற்கு பெயர் போன, ராஜ் மவுலியின் அடுத்த படைப்பான ‘RRR’ நாளை முதல் உலகம் முழுக்க இருக்கும் திரையரங்குகளில் பரவலாக வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கர் எப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவரோ, அது போல தெலுங்கு சினிமாவிற்கு ராஜ் மவுலி. என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவகன், அலியா பட், சமுத்திரக்கனி என்ற மிகப்பெரிய குழுவை வைத்து அவர் இயக்கி இருக்கும் ‘RRR’ என்னும் பிரம்மாண்டம் நாளை (25-03) உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது.
“ என்று இந்த படம் துவங்கப்பட்டதோ அன்றிலிருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடம் உச்சமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் ராஜ் மவுலி நிச்சயம் பூர்த்தி செய்வார் என்பதை நம்புவோம் “