ரீ ரிலீஸ் ஆகும் இயக்குநர் தங்கர்பச்சானின் ‘அழகி’ திரைப்படம்!
Azhagi Re Release Update Idamporul
இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் கடந்த 2002 காலக்கட்டத்தில் வெளியான ‘அழகி’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருகிறது.
இயக்குநர் தங்கர்பச்சான் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 2002 -யில் வெளியான அழகி திரைப்படம் 22 வருடங்களுக்கு பிறகு ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு வருகின்ற மார்ச் 29 அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தில் நாம் நம்மை உணர முடிந்தாலே அந்த படம் வெற்றிப் படம் தான், அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பல இடங்களில் நாம் நமது வாழ்வியலையும், நமது வாழ்வினில் நிகழ்ந்த ஒரு சில நினைவலைகளையும் உணர்வோம். தங்கர்பச்சான் அவர்களின் எழுத்தும், காட்சியும், கூடவே இளையராஜாவின் இசையும், என படம் முழுக்க நமது இதயத்தை எதோ ஒன்று மீட்டிக் கொண்டே இருக்கும்.
“ தேசிய விருது வாங்கிய இத்திரைப்படம் மீண்டும் ரீ ரிலிஸ் ஆவதில் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியே “