தலைவர் 169 | ’இயக்கம் நெல்சனிடம் இருந்து பறிக்கப்பட்டு அட்லியிடம் கொடுக்கப்படுகிறதா?’
Sun Pictures Suggested Atlee To Thalaivar For 169
தலைவர் 169 திரைப்படத்தின் இயக்கம் நெல்சனிடம் இருந்து பறிக்கப்பட்டு அட்லியிடம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாய் போகாத காரணத்தால், சன் பிக்சர்ஸ் நிறுவனம், தலைவர் 169 திரைப்படத்தை நெல்சனிடம் இருந்து அட்லியிடம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த் அவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கருத்து வெளியாகி இருக்கிறது.
ஒரு பெரிய நிறுவனம் தயாரிப்பில் ஈடுபடும் போது, இளம் இயக்குநர்களுக்கு கதைகளை விரிவாக்க நேரம் கொடுத்துவிட்டு அதற்கு அப்புறம் இயக்க அனுமதிக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தை கொடுத்துவிட்டு அதற்குள் படத்தை முடித்தே ஆக வேண்டும் என்று கால அவகாசம் கொடுத்தால் அவர்களின் திறமைகள் கேள்வி குறியாகி விடும்.
“ இளம் இயக்குநர்களே, இனி உங்கள் கதைகளை வலுப்படுத்திக் கொண்டு அதற்கு அப்புறம் பெரிய நடிகர்களை அணுகுங்கள். ஒரு வரி கதையை வைத்துக் கொண்டு அவர்களை அணுகும் போது, கால அவகாசங்களால் அந்த கதையை நீங்கள் நினைத்த மாறி எடுக்க முடியாமல் போகலாம் “