வெளியானது துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

King Of Kotha Trailer Is Out Idamporul

King Of Kotha Trailer Is Out Idamporul

நடிகர் துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் அபிலாஷ் ஜோஷி அவர்களின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான், பிரசன்னா, ஷபீர், ஐஸ்வர்யா லெட்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் ஆகஸ்டில் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெயிலர் முழுக்க துல்கர் சல்மான், ஒரு கோதாவின் கேங் ரவுடியாகவே தெரிகிறார். அந்த கேரக்டருக்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் மெனக்கெட்டு இருக்கிறார் என்பது ட்ரெயிலரை பார்க்கும் போதே தெரிகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ நிச்சயம் துல்கர் சல்மான் அவர்களின் ஹிட் வரிசையில், கிங் ஆஃப் கோதாவும் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பது ட்ரெயிலரிலேயே புலப்படுகிறது “

About Author