காரோட்டியின் காதலி | ’இங்க யாருமே தனக்கு கீழ வேல செய்யுறவன மனுஷனா நடத்துறதே இல்ல’
Karottiyin Kadhali Movie Trailer Is Out
ஆர். சிவா மற்றும் இளங்கோ குமாரவேல் நடிக்கும் ‘காரோட்டியின் காதலி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆர். சிவா அவர்களின் எழுத்தில், நடிகர் இளங்கோ குமாரவேல் நடிக்கும் ‘காரோட்டியின் காதலி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எதார்த்த சினிமாக்கள் வருவதே சினிமாவின் வெற்றி தான். சினிமாவில் ஒருவன் எதார்த்தமான தன்னை பார்க்கிற போது அது அதுவாகவே வெற்றியை தொடும்.
“ இளங்கோ குமாரவேல் அவர்களின் திறமையை நாம் அபியும் நானும் திரைப்படத்திலேயே பார்த்திருப்போம். இந்த எதார்த்த களத்திற்கு அவரை தெரிவு செய்ததிலேயே படம் பாதி வென்று விட்டது “