அன்று தன் படத்தை ஆட்டோ ஓட்டி புரோமோசன் செய்தவர் யாஷ், இன்று யாஷ் என்றாலே ஒரு பிராண்ட்!
’தன்னை தானே செதுக்கியவன்’ என்ற வார்த்தை நிச்சயம் நடிகர் யாஷ் அவர்களுக்கு பொருந்தும்.
ஒரு காலத்தில் தன் படத்தின் புரோமோசனுக்காக, தன் படத்தின் பதாகைகளை ஆட்டோவில் ஏந்தி ஊர் முழுக்க புரோமோசன் செய்தவர் தான் யாஷ். ஆனால் இன்று உலகம் முழுக்க அவர் ஒரு பிராண்ட் ஆக வளர்ந்து நிற்கிறார். இன்று அவரின் KGF 2 உலகம் முழுக்க 10,000 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. நிச்சயம் ‘தன்னை தானே செதுக்கியவன்’ என்ற வார்த்தை யாஷ் அவர்களுக்கு பொருந்தும்.
“ கே.ஜி.எப் என்ற படத்திற்காக அளவெடுத்து செய்தவர் போலவே இருக்கிறார் யாஷ், நிச்சயம் அவர் இந்த படத்திற்கு விடுத்து இருக்கும் உழைப்பால் இன்னும் பல உயரங்களுக்கு செல்வார் என்பதி ஐயமில்லை “