பிரபல கன்னட நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைது!

Famous Kannada Actor Darshan Thoogudeepa Arrested In Murder Case Idamporul

Famous Kannada Actor Darshan Thoogudeepa Arrested In Murder Case Idamporul

பிரபல கன்னட நடிகர் ஆக அறியப்படும் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தர்ஷனுக்கு நெருங்கிய உறவான பவித்ரா கவுடா என்பவரை சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த ரேனுகா சுவாமி என்பவர், ஆன்லைனில் ஹராஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா கவுடா இதனை தர்ஷனிடம் தெரிவிக்கவே, தர்ஷன் அவருக்கு நெருக்கமான ஒரு சிலருடன் இணைந்து ரேனுகா சுவாமியை கடத்தி தன்னுடைய பண்ணை வீட்டில் வைத்து அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் உடலை காமாஷிபாளையம் அருகே உள்ள ஒரு டிரைனேஜில் போட்டு விட்டதாக தெரிகிறது. உடலை கைப்பற்றி விசாரித்த பெங்களுரு காவல்துறை இந்த கொலை சம்பந்தமாக 9 பேரை கைது செய்தது. பின்னர் இந்த கொலையில் நடிகர் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டு நடிகர் தர்ஷனையும் தற்போது கஸ்டடியில் எடுத்து இருக்கிறது.

“ தர்ஷனும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது ஆதாரத்துடன் உறுதி ஆகி இருப்பதால் அவரை அவரது பண்ணை வீட்டிற்கு நேரடியாக சென்று கைது செய்து இருக்கிறது கர்நாடகா காவல்துறை “

About Author