பைக்கிலேயே சுற்றும் நடிகர் அஜித்குமார், விடா முயற்சி ஷூட்டிங் தான் எப்போது?
Ajith Bike Tourism Does Not End Vida Muyarchi Shoot When Fact Here Idamporul
நடிகர் அஜித்குமார் அவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் பைக்கில் வலம் வருவதால், விடாமுயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
தொடர்ந்து வெளிநாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் அஜித்குமார் அவர்களால், அவரது ரசிகர்களே காண்டாகி இருக்கின்றனர். விடா முயற்சி என்று படத்திற்கு டைட்டில் மட்டும் வைத்து விட்டு, படத்திற்கான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காததால் ரசிகர்கள் இணையத்தில் குமுறி வருகின்றனர்.
வாரிசு, துணிவு இரண்டும் ஒரே கட்டத்தில் வெளியாகி, நடிகர் விஜய் அதற்கு அடுத்து ஒரு படத்தையும் முடித்து விட்டு, இன்னொரு படத்தின் ஷீட்டிங்குக்கு போய் விட்டார். ஆனால் நடிகர் அஜித் ஏதோ நடிப்பதில் ஈடுபாடு இல்லாதது போல வேறு வேறு வேலைகளில் பிசியாக இருக்கிறார்.
என்ன தான் கதை ரெடியாகட்டும் என்று காத்து இருந்தாலும் கூட அதற்காக இத்துனை மாசங்களா ஒரு ரசிகனால் காத்து இருக்க முடியும். 72 வயதில் ரஜினிகாந்த் அவர்கள் 6 மாதத்திற்கும் ஒரு படத்தையே முடித்து கொடுக்கிறார். ஆனால் அஜித் அவர்களோ 2 வருடத்திற்கு ஒரு படம் என்று அதுவும் ஏதோ சொதப்பல் படத்தை தான் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
“ அஜித்குமார் என்னும் நடிகனுக்கு ரசிகராக இருக்கும் ஒவ்வொரு ரசிகனையும் அவர் மதித்தால், ஒரு படத்திற்கு ஒரு படம் என்றாவது திருப்தியாக நடித்துக் கொடுக்க வேண்டும். இல்லையேல் ஒட்டு மொத்தமாக சினிமாவை கைவிட்டு விட்டு அவரது நாட்களை அவரது விருப்பல் போல கழிக்கட்டும் என தீவிர ரசிகர் ஒருவர் ட்விட்டரில் குமுறி வருகிறார் “