அனுபாமாவை கடுமையாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள், காரணம் என்ன?

Fans Harshly Criticizing Anupama Parameswaran In Social Media Why Reason Here Idamporul

Fans Harshly Criticizing Anupama Parameswaran In Social Media Why Reason Here Idamporul

பிரபல நடிகையாக அறியப்படும் அனுபாமா பரமேஸ்வரன் அவர்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிரேமம், கொடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக செம்ம பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தில்லு ஸ்குயர் என்னும் படத்தில் கமிட் ஆகி இருந்த அனுபாமா அத்திரைப்படத்தில் வழக்கத்தை விட சற்றே அதிகமான ரொமான்டிக் சீன்களில் நடித்து இருக்கிறார்.

அந்த ரொமான்டிக் சீன்கள் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு படத்தின் ட்ரெயிலரிலும், போஸ்டரிலும் மிகைப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படவே, நெட்டிசன்கள் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், தில்லு ஸ்குயர் திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டின் கீழும் சென்று அனுபாமா அவர்களை ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர். இதனால் மனமுடைந்த நடிகை அனுபாமா படத்தின் புரோமோசன் விழாக்களில் கூட பங்கேற்காமல் தவிர்த்து விட்டாராம்.

” ஒரு படத்தில் நடிப்பது என்பது அவரின் தனிப்பட்ட உரிமை, விமர்சனங்கள் என்பவை படம் குறித்ததாக இருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட ஒருவரை ஆபாசமாக தாக்குபவையாக இருக்க கூடாது என பலரும் அனுபாமாவிற்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கின்றனர் “

About Author