Fight Club | ‘படம் முழுக்க அதிரடி, முதல் பாதியில் விறுவிறுப்பு, பின்பாதியில் கொஞ்சம் பின்னடைவு’
நடிகர் விஜய் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Fight Club’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜயகுமார் அவர்கள் நடிக்கும் ‘Fight Club’ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படம் முழுக்க ரத்தக்கறைகள், வடசென்னையை மையப்படுத்தி மற்றுமொரு திரைப்படம், அரசியலுக்கும், போதைக்கும், பழி வாங்கும் நோக்கத்திற்கும் நடுவில் வாழும் செல்வமாகிய விஜயகுமார் என்பவரின் கதை. முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, பின்பாதியில் இல்லை, இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கணிக்க கூடியதாகவே நகர்கிறது. இசை, ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்க்கிறது.
“ படம் முழுக்க வன்முறை தெறிக்கிறது, படத்திற்கு A சர்ட்டிபிகேட் கொடுத்து இருந்தாலும் கூட அதையும் கடந்த வன்முறை படத்தில் இருக்கிறது “
Fight Club இடம்பொருள் மதிப்பீடு: