’இறங்கி செய்யலாம்னு இருக்கேன்’ ப்ளு சட்டை மாறனுக்கு எச்சரிக்கை விட்ட கவுதம் மேனன்!
Gautham Menon Warns Blue Sattai Maran
சமீபத்தில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கவுதம் மேனன், ப்ளுசட்டை மாறனுக்கு ஒரு பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார்.
சமீப காலமாகவே ப்ளு சட்டை மாறன் படங்களை விமர்சிப்பதோடு மட்டும் அல்லாமல் கொஞ்சம் காட்டமாக ஒரு சில வார்த்தைகளையும் அள்ளி விடுகிறார். சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் அவ்வாறே விமர்சித்து இருந்தார். இது குறித்து கவுதம் மேனன் கூறுகையில் ‘யார் என்ன செய்யுறாங்களோ, நான் இறங்கி செய்யலாம்னு இருக்கேன்’ என்று மாறனுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
“ விமர்சனம் என்பது விமர்சனமாக இருக்க வேண்டும், அதில் தனிமனித தாக்குதல்கள் இருக்க கூடாது, ஆனால் அதை மாறன் வெகுகாலமாக செய்து வருகிறார். விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்பதே சினிமா படைப்பினரில் எதிர்பார்ப்பாக இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.