’கதை மெல்லமாக தான் நகரும், நல்லா தூங்கிட்டு வந்து படம் பாருங்க’ – இயக்குநர் கவுதம் மேனன்
Gautham Menon Interview About VTK
இயக்குநர் கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் பற்றி ஒரு ருசிகர தகவல் ஒன்றை அளித்து இருக்கிறார்.
’படம் மெல்ல தான் நகரும் அதனால் காலை ஷோ பார்ப்பவர்கள் நன்றாக தூங்கி எந்திரித்து வந்து படம் பாருங்கள்’ என்று கவுதம் மேனன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே படம் 2:55 மணி நேரம் என்பதால் கவுதம் மேனனின் இந்த எச்சரிக்கை வந்ததும் ரசிகர்கள் பீதியாகி இருக்கின்றனர்.
“ படம் சுவாரஸ்யமாக இருந்தால் 3 மணி நேரம் தாக்கு பிடிக்கலாம், ஒரு வேளை எக்கு தப்பாகி போனால், அவ்வளவு தான். இருந்தாலும் கவுதம் மேனன் – சிம்பு கூட்டணியை சற்றே நம்புவோம் “