இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
Happy Birthday Mariselvaraj Idamporul 2023
தனது படைப்புகளின் மூலம் சமூகத்தில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
பரியேறும் பெருமாள் என்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் இயக்குநர் மாரி செல்வராஜ். அதற்கு பின் கர்ணன், தற்போது மாமன்னன், வாழை இரண்டு பெரிய படங்களை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
“ பொழுது போக்கிற்காக ஒரு பக்கம் சினிமா இருந்தால், இன்னொரு பக்கம் தாக்கம் ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் மாரி செல்வராஜ் இன்னும் நிறையவே அவரது எழுத்தின் மூலம் நிறைய தாக்கம் ஏற்படுத்துவார் “