பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர் சங்கர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
shankar02022021m1
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் இயக்குநட் சங்கர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
தமிழ் சினிமாவை உலகதரத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்களுள் இயக்குநர் சங்கர் முதன்மையானவர் என்றே கூறலாம். ஜென்டில் மேனில் தொடங்கி 2.0 வரை எடுத்த அனைத்து படமும் ஹிட் தான். ஒரு படத்தில் பாடல் தானே என்று கடந்து போக முடியாத அளவிற்கு பாடலிலும் கூட சங்கர், அவர்களின் பிரம்மாண்டத்தை காட்டி இருப்பார்.
கதைக்களம் இருந்தால் தான் பிரம்மாண்டம் எடுபடும், தற்போதெல்லாம் வெறும் பிரம்மாண்டத்தை வைத்துக்கொண்டு மட்டும் கதையை நகர்த்தி காசு பார்க்கின்றனர். பிரம்மாண்டம் + கதைக்களம் என்பதை இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
” இனி இந்தியன் 2 திரைப்படத்திற்கு தான் மொத்த கோலிவுட்டும் காத்திருக்கிறது. காத்திருப்புகளுக்கு ஆதங்கமாய் ஏதாவது அப்டேட் வந்தால் நன்றாக இருக்கும் “