HBD Jyotika | ‘ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாலே!’
Happy Birthday Jyotika 18 10 2022
நவரசங்களையும் நடிப்பினையும் சினிமாவிற்கு நிறையவே கொடுத்து சென்ற அழகு பதுமை ஜோதிகா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
’ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாலே, அழகுக்கே இலக்கணம் எழுத அவளே பிறந்தாலே’ என்ற வரிகளுக்கு ஏற்ப இன்றும் அழகு பதுமையாய் விளங்கும் நடிகை ஜோதிகா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நவரச நாயகன் என்றால் கார்த்திக், நவரச நாயகி என்றால் ஜோதிகா. அவரது பாவனையில் மயங்காத ரசிகர்களே இல்லை.
“ அழகுக்கு மட்டும் அவர் இலக்கணம் எழுதவில்லை, வாழ்க்கை முறை, சமுதாயப் பற்று என்று இந்த சமூகத்தின் பல நன்மைகளுக்கும் அவர் கணவர் சூர்யாவுடன் இணைந்து பல இலக்கணங்களை வகுத்து வருகிறார். இடம்பொருள் சார்பாக வாழ்த்துக்கள் ஜோதிகா அவர்களே “