தீரா இசையை காதலாக கொண்ட, இசை தீரனுக்கு இன்று பிறந்த நாள்!
இசையின் கடல், மேஸ்ட்ரோ, இசை மேகம் என்றெல்லாம் மக்களால் போற்றப்படும் இளையராஜா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
ஞான தேசிகன், ஆம் அவர் இயற்பெயர் ஞான தேசிகன் தான், 1400க்கும் மேற்பட்ட படங்கள், 7000-ற்கும் மேற்பட்ட பாடல்கள், 20,000-ற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் என்று இத்தனை சாதனைகள் நிகழ்த்திய பின்னரும் ஒரு மனிதருக்குள் இசை தீர்ந்து விடவில்லை என்றால் அவரே இளைய ராஜா. நீர் பிறப்பின் சரித்திரம் ஐயா.
ரஜினி அவர்களின் ’தளபதி’ படத்தில் ஒரு காட்சி, சிறு வயது ரஜினியை சிறுவயதிலேயே தாயானவள், தனக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு ரயிலில் வைத்து அவனை பிரிய தயாராகி விடுவாள். சில வருடங்கள் கழித்து விதி விதிக்கின்ற விதியால் ஒரு கோவிலில் தாயும் பிள்ளையும் எதிர் எதிரில் சந்திக்க நேரிடுகிறது, தாயுக்கு எதிரில் இருப்பது தன் பிள்ளை என்று தெரியாது. மகனுக்கும் எதிரில் இருப்பது தன் தாய் என்று தெரியாது.
அப்போது தூரத்தில் ஒரு ரயிலின் சத்தம், தாய் தன் மகனை நினைத்து ஏக்கம் கொண்டு ரயில் போகும் திசையை நோக்கி திரும்பி பார்க்கிறாள். மகன் தன் தாயை நினைத்து ஏக்கம் கொண்டு ரயில் போகும் திசையை நோக்கி திரும்பி பார்க்கின்றான். இதற்கிடையில் ஒரு இசை தவழும் பாருங்கள். அந்த இரு ஏக்கங்களும் மொழிகளின்றி இசையின் வாயிலாய் இந்த காட்சியை பார்க்கின்ற ரசிகனின் இதயத்தை துளைக்கும். அந்த அளவுக்கு அந்த இசை இருக்கும். ஆம் இளையராஜா என்னும் இசை அரக்கனால் மட்டுமே இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
“ அட்யபாத்திரம் என்பார்களே, ஆம் அது போல தான் இந்த மனிதனும், இவருக்குள் இருக்கும் இந்த இசையும் தீர தீர ஊறிக்கொண்டே இருக்கும். இனிய பிறந்த்நாள் வாழ்த்துக்கள் இசை தீரனே “