ட்ரெண்டிங்கில் ‘வலிமை’ படத்தின் வில்லன் ‘கார்த்திகேயா’!
Happy Birthday Valimai Villain KarthiKeya
பொதுவாகவே ஒரு படத்தின் ஹீரோக்களுக்கு தான் ட்ரெண்டிங் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இங்கு ஒரு படத்தின் வில்லனை ட்ரெண்டிங்கில் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். ஆம் வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரையும் ட்ரெண்டிங்கில் ஏற்றி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் தல ரசிகர்கள்.
வலிமைப் படக்குழுவும் தங்கள் சார்பில் ஒரு போஸ்டரை வெளியிட்டு கார்த்திகேயா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி இருக்கிறது. தற்போது ட்விட்டர் மற்றும் சமூக வலை தளங்கள் முழுக்க அந்த போஸ்டரும், வலிமை வில்லனும் தான் தற்போதைய ட்ரெண்டிங்.
“ ஒரு படத்தில் நடிக்கும் அத்தனை பேரையும் ட்ரெண்ட் ஆக்குவதும், வலிமை என்ற பெயரை யார் சொன்னாலும் அவரை ட்ரெண்ட் ஆக்குவதையும் வாடிக்கையாக்கி வருகின்றனர் தல ரசிகர்கள் “