HBD Yuvan | ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய், அட நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்’
Happy Birthday Yuvan Shankar Raja 31 08 2022
யங் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா அவர்கள் இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.
நா. முத்து குமார் அவர்கள் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய், அட நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்’ என்ற வரிகளை யுவனை மனதில் வைத்து எழுதி இருப்பார் போல. அது யுவனுக்கும் கச்சிதமாய் பொருந்தும். யாரோ நாலு இசை டானுடன் போட்டி போட்டு அவர் இந்த நிலைக்கு வரவில்லை. அவர் ஆரம்ப காலத்தில் போட்டி போட்டது எல்லாமே இசை டான்கள் (ஏ ஆர் ரஹ்மான், இளைய ராஜா) தான்.
“ எந்த நிகழ்வுக்கேற்ற எந்த காலத்திற்கேற்ற பாடல் வேண்டும் என்று கேட்டாலும், அதை யுவன் எப்போதோ செய்து வைத்திருப்பார், அதுவே அவரின் ஸ்பெசல். இன்னும் அவர் நீண்ட காலம் இசையாகவே வாழ்ந்திட இடம்பொருள் சார்பாக வாழ்த்துக்கள் “