ஹரீஸ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது!
Harish Kalyan In And As 100 Crore Vaanavil Motion Poster Is Out
ஹரீஸ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
அருண் அருணாச்சலம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சசி அவர்களின் இயக்கத்தில், ஹரீஸ் கல்யாண், சித்தி, கோவை சரளா, தம்பி ராமையா, சம்பத் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ காதல் கலந்த திரைப்படத்தில் தொடர்ந்து இணைந்து கலக்கி கொண்டு இருக்கும் ஹரீஸ் கல்யாணின் மற்றுமொரு காதல் படைப்பு, வெற்றி பெற வாழ்த்துக்கள் “