மீண்டும் இசையின் பக்கம் திரும்பும் விஜய் ஆண்டனி?
Here After I Will Concentrate In Music Also Says Vijay Antony Idamporul
நடிகர் விஜய் ஆண்டனியாகவே வலம் வருபவர், இனி அவ்வப்போது இசையமைப்பாளராக, இசை பக்கமும் திரும்ப இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
ரத்தம் திரைப்படத்தின் புரொமோசனுக்காக, தன் மகள் இறந்த துக்கங்களை கூட ஓரங்கட்டி விட்டு, பலரின் வாழ்வு என்பதால் மீண்டும் அந்த பட வேலைகளுக்குள் நுழைந்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் அந்த பட புரொமோசனுக்கான நேரலையில் ’இன்னமும் ரசிகர்கள் என் பாடல்களை ரசிப்பது மகிழ்வாக இருக்கிறது, இனி இசையிலும் கவனம் செலுத்துவேன்’ என கூறி இருக்கிறார்.
“ நல்ல வாய்ப்பு வந்தால் இனி இசையமைப்பாளராகவும் விஜய் ஆண்டனியை பார்க்க முடியும் என கூறி இருக்கிறார். ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள் என்பதில் ஐயமில்லை “