தனது ஆறாவது படத்திற்காக மாஸ்சான டைரக்டருடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி!
Hiphop Thamizha HHT6 Announced
ஹிப்ஹாப் ஆதியின் ஆறாவது படத்திற்கான டைரக்டர், தயாரிப்பாளர் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஹிப் ஹாப் ஆதி தனது ஆறாவது படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் ’சத்யஜோதி பிலிம்ஸ்’ உடன் இணைய இருக்கிறார். மேலும் அந்த படத்தை ‘மரகத நாணயம்’ என்னும் ஹிட் படத்தை கொடுத்த டைரக்டர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்துள்ளனர்.
“ ஏதோ மாய மந்திரங்கள் செய்து எப்படியாவது ரசிகர்களை தன் படத்திற்கு திரையரங்குகளின் பக்கம் இழுத்து விடுகிறார் ஹிப்ஹாப் ஆதி. படம் எப்படி இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து விடுகிறார். அதுவே அவரின் வெற்றியாகிறது “