மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே உள்ள சாலைக்கு அவரின் பெயர்!
Chinna Kalaivanar Vivek Road
மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே இருக்கும் சாலைக்கு அவரின் பெயரை சூட்டி கவுரவித்து இருக்கிறது தமிழக அரசு.
உடல்நலக்குறைவால் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக, அவரது இல்லம் அருகே இருக்கும் சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என்று பெயரிட்டு அரசாணை பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு. நடிப்போடு விட்டு விடாமல் கலாம் அவர்களின் வழியில் பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தவர் விவேக். உயிராக இல்லையெனினும் மக்கள் மனதில் அவர் என்றும் இருப்பார்.
“ தமிழக அரசின் இந்த சீர்மிகு செயல்பாட்டிற்கு, தமிழக திரைத்துறையும், நடிகர் விவேக் அவர்களும் குடும்பமும் பெரும் நன்றியை தெரிவித்து இருக்கிறது “